அவள்
தொப்பை வேண்டுமென்று
சுற்றுகிறாள்
ஆயிரம் முறை
அரசையும் வேம்பையும்
இடைஇடையே
அடிவயிற்றை தடவுகிறாள்
அனிச்சையாய்
பிள்ளைப்பேறு பெற்றதும்
சுற்றுகிறாள்
சுகப் பிரசவத்திற்காக
கோயில் கோயிலாய்
குழந்தை பிறந்ததும்
சில காலத்தில்
மறுபடியும் சுற்றுகிறாள்
விளையாட்டுத் திடலை
தொப்பையை தவிற்க
அதனால்தான் உலகமும் சுற்றுகிறதோ?
No comments:
Post a Comment